Tuesday, September 25, 2012
இலங்கை::யுத்தத்தின் பின்னா 400 படைவீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் யுத்த காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை சமாளிக்க முடியாத காரணத்தினால் பலர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் யுத்தத்தின் பின்னரான கடந்த ஆண்டுகளில் படைவீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அட்ஜஸ்மன்ட் டிசோடர் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டே அதிகளவான படைவீரர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். படைவீரர்களுக்கு மாதாந்தம் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுவதாகவும், உளவியல் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment