Tuesday, September 25, 2012
இலங்கை::வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவத்திற்கு மாத்திரமன்றி விமானப் படை மற்றும் கடற்படையினரையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்தில் முப்படைகளின் கூட்டுப் பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்தார்.
வெளிநாட்டு இராணுவத் துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படையின் கப்பல்கள், அவர்களது தளவாடங்களுடன் அழைத்து முப்படை யினருக்கும் இந்த பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை மிகவும் திட்டமிட்ட அடிப் படையில் சிறந்த பயிற்சிகளை வழங்க இலங்கை இராணுவத்தினருக்கும், முப் படையினருக்கும் முடிந்ததாக தெரிவித்த அவர், ஐந்து நாடுகள் கலந்து கொண்டதன் மூலம் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி வெற்றியளித்துள்ளது என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
வாகரை கலைத்தீவு கடற்பரப்பில் இறுதியாக நடைபெற்ற முப்படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சி நடவடிக்கை களை பார்வையிட வந்த இராணுவத் தளபதி அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதி மேலும் தகவல் கூறியதாவது, எதிர்காலத்தில் இது போன்ற கூட்டு இராணுவ பயிற்சிகளில் வெளிநாடுகளின் பங்கு பற்றுதலை மேலும் அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எமது அனுபவங்களை வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்வதுடன் எமது படை வீரர்களின் பயிற்சித் திறனை மேலும் அதிகரிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
வன்னி நடவடிக்கைகளில் இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் விஷேட படைப் பிரிவுகள் தமது உச்சகட்ட பங்களிப்புக்களை வழங்கியதுடன் திறமைகளை வெளிக் காண் பித்தனர். அவர்களது பயிற்சித் திறமையை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இந்த கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இராணுவத்தின் ஏனைய படைப் பிரிவுகளினதும் இது போன்ற பயிற்சி நடவடிக்கைகளை வழங்க ஆலோசனைகளை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு நான் வழங்கியுள்ளேன்.
யுத்தத்திற்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் சிறந்ததாக காணப் படுகின்றன. பொலிஸார் தற்பொழுது சின்ன முனையில் சிவில் நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இராணுவம் அவர்களுக்குத் தேவையான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறது.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஒத்து ழைத்து வரும் அதேசமயம் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பூரண பங்களிப்பை மேலும் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.



No comments:
Post a Comment