,September,04,2012சென்னை::கே.கே. நகரில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய சிறுவன், ‘கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் பள்ளி வெடித்து சிதறும்’ என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டான்.
உடனே கே.கே. நகர் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். இது புரளி என தெரிந்தது.
பள்ளிக்கு அருகில் உள்ள மெடிக்கல் ஷாப் பொது தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே குண்டுமிரட்டல் செய்தியை அறிந்து பள்ளியில் குவிந்த பெற்றோர், குழந்தைகளை அழைத்து செல்வதாக கூறினர். Ôபுரளி என்பது தெரிந்ததால் பள்ளிக்கு விடுமுறை விட முடியாது. விடுமுறை அறிவித்தால், இதுபோன்ற மிரட்டல் தொடர் கதையாகிவிடும்Õ என நிர்வாகத்தினர் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெற்றோரை போலீசார் வந்து சமாதானப்படுத்தி அனுப்பினர்.
No comments:
Post a Comment