Tuesday, September 04, 2012இலங்கை::புலிச் சந்தேக நபர்கள் உட்பட பலருக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காவற்துறையின் நற்சான்றிதழ்களை வழங்கியமை தொடர்பாக கொம்பனித் தெரு காவற்துறை நிலையத்திற்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்து;ளள கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர், மூன்று பேரை கைதுசெய்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளை நடத்தி வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொம்பனித தெரு காவற்துறையினரிடம் இருந்த அனைத்து நற்சான்றிதழ் விண்ணப்பங்களையும் கைப்பற்றியுள்ளனர். கொம்பனித் தெரு காவற்துறை நிலையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களை உறுதிப்படுத்தி கொள்வதற்காக அதிகமானனோர், வெளிவிவகார அமைச்சின் கௌன்சிலர் பிரிவுக்கு வருவவதை அவதானித்த அதிகாரிகள், அது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
தமிழர்களும், முஸ்லிம்களுமே அதிகளவில் காவற்துறையின் நற்சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள், காவற்துறையின் நற்சான்றிதழை பெற்றுக் கொடுப்பதற்காக ஒருவரிடம் தலா 5 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment