Tuesday, September 4, 2012

திருச்சியில் இலங்கை பக்தர்கள் மீது கல்வீசித் தாக்குதல் : 12 பேர் காயம்!

Tuesday,September,04,2012
காட்டூர்::திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இலங்கை பக்தர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது, மதிமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணிக்கு வழிபட வந்த இலங்கை மக்களுக்கு, நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாங்கண்ணி மாதா கோயிலில் இலங்கையை சேர்ந்தோரை அனுமதிக்க கூடாது எனக் கோரி, நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். கடும் எதிர்ப்பையடுத்து திருச்சிக்கு இலங்கை பக்தர்கள் அனுப்பி வைக்கபட்டனர். திருச்சி செல்லும் வழியில் இலங்கை பக்தர்களுக்கு, திருவாரூர் புறவழிச் சாலையில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. பின்னர் திருவெறும்பூர் அருகே இலங்கையினரின் வாகனம் வந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் திரண்டிருந்த மதிமுகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் 12 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment