Thursday, September 27, 2012
இலங்கை::இலங்கையுடன் பேணப்படும் உறவுகளை தொடர்ந்தும் உயர் மட்டத்தில் முன் எடுக்க எதிர்பார்ப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் யெங் ஜியேசி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிசை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக இரண்டு நாடுகளுக்கிடையே காணப்படும் சம்பிரதாயபூர்வ ஒற்றுமை தொடர்ந்தும் வலுப்படுத்தி கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, இரண்டு நாடுகளுக்கிடையே காணப்படும் உறவுகள் குறித்து சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக சிங்குவா செய்திதாள் தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment