Thursday, September 27, 2012

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிகிச்சை!

Thursday, September 27, 2012
இலங்கை::கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கான இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சையளிக்கும் திட்டம் ஆகியன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய சுகாதாரப் பிரிவினருக்கு இதுதொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான சரத் தெனியகே தெரிவித்தார்.

குறிப்பாக மலேரியா காய்ச்சல் பரவியுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற மற்றும் அந்த நாடுகளுக்கு பயணமாகின்ற மக்களுக்கு இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுமார் 20 பேர் மாத்திரமே பதிவானதுடன் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்களில் 55 பேர் பதிவானதாகவும் வைத்தியர் சரத் தெனியகே கூறினார்.

No comments:

Post a Comment