Thursday, September 27, 2012
இலங்கை::சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கடற்பரப்பின் தெய்வேந்திர முனைக்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த கைது இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 9 முஸ்லிம்களும், 3 தமிழர்களும் 7 சிங்களவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வவுனியா, திருகோணமலை, புல்மோட்டை மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்;களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
தேரரைத் தாக்கியதாகக் கூறப்படும் முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!
ஹொரவ்பத்தானை பிரதேச சபையின் உறுப்பினரான தேரர் ஒருவரைத் தாக்கியதாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கெப்பித்திக்கொல்லாவ மாவட்ட நீதவானும் நீதிபதியுமான கயான் மீகமகே முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இரவு ஹொரவ்பத்தானையில் உள்ள விஹாரை ஒன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் பிரதேச சபை உறுப்பினரான தேரர், பாடசாலை ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார்.

No comments:
Post a Comment