Monday, September 24, 2012

சபரகமுவ -வடமத்திய முதல்வர்கள் பதவிப் பிரமாணம்!

Monday, September 24, 2012
இலங்கை::மூன்று மாகாணசபைகளிலும் பெற்றுக் கொண்ட தேர்தல் வெற்றியை பொதுமக்கள் பெற்றுக் கொண்ட வெற்றியாக மாற்றி அமைப்பதற்கு, தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..

கடந்த வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

தேர்தல் வெற்றியை தனிப்பட்ட ஒரு வெற்றியாக கருதக்கூடாது..

மக்களுடைய சவால்கள் மற்றும் அபிலாசைகளை நிவர்த்திப்பதற்கு கட்சி, நிற பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் வரவு செலவு திட்டத்திலும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான விடயங்கள் உள்வாங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

இதுதவிர, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைக்கான புதிய முதலமைச்சர்களின் சத்திய பிரமாணங்கள் நாளை கட்டாயமாக இடம்பெறவுள்ளதாக அரசாங்க தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சபரகமுவ மாகாண சபை முதலமைச்சராக மஹிபால ஹேரத் நியமிக்கப்படவுள்ள நிலையில், வடமத்திய மாகாண சபையின் புதிய முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதன்பா, எமது செய்திச் சேவைக்கு சற்று முன்னர் தகவல் வெளியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட தமது சகோதரர் எஸ்.எம்.ரஞ்சித்தே நாளை முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொள்வார் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment