Monday, September 24, 2012
ஆலந்தூர்::இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு பிரிவு கூடுதல் இயக்குனர் காந்திராஜன், துணை கமிஷனர் விமலா உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீ சார் நேற்று முன்தினம் விமான நிலையம் அருகே கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் கொழும்பை சேர்ந்த பிரேம்ஆனந்த் (41), திலிப்குமார்(33) என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்த 58 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம். அவர்களை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment