Monday, September 24, 2012

அமெரிக்க திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பலப்பிட்டியில் எதிர்ப்பு பேரணி!

Monday, September 24, 2012
இலங்கை::நபிகள் நாயகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திரைப்படத்தை கண்டித்து தொடர்ந்தும் எதிர்ப்பு நடடிவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


குறித்த திரைப்படத்தி்ற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது.

இந்த பேரணியை மேல்மாகாண ஆளுனர் அளவி மௌலானாவுடன் இணைந்து நபவிய்யா தரீக்கா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பம்பலப்பிட்டியில் இருந்து கொள்ளுபிட்டி வரை பேரணியாக சென்றவர்கள்  நபிகள் நாயகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திரைப்படத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த எதிர்ப்பு பேரணி காரணமாக இன்று முற்பகல் காலி வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment