Saturday, September 1, 2012

மயானத்தில் வெடிச் சம்பவம்; பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் காயம்!

Saturday, September 01, 2012
இலங்கை::கண்டி வத்தேகம் பகுதியிலுள்ள மயானமொன்றில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் வத்தேகம நகர சபைத் தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

சடலமொன்றை எரிப்பதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எரிகாயங்களுடன் வத்தேகம நகர சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் வத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மயானத்திலுள்ள எரிவாயு குழாயொன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment