Saturday, September 01, 2012இலங்கை::பண்டாரவளை பகுதியில் 15 வயதான மாணவரொருவர் காணாமற்போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டாரவளை கோவிலொன்றுக்கு அண்மையில் குறித்த மாணவர் நேற்று பிற்பகல் காணாமற்போனதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.
கல்விச் சுற்றுலாவுக்காக பண்டாரவளை சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவர் காணாமற்போனதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment