Saturday, September 1, 2012

உலக வங்கி அதிர்ச்சி தகவல் : உணவு பொருட்களின் விலை ஜூலையில் 10% அதிகரிப்பு!

Saturday, September 01, 2012
வாஷிங்டன்::உலகம் முழுக்க உணவு பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் உணவு பொருட்களின் விலையேற்றம் குறித்து உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெயில் மற்றும் வறட்சியால் சோளம் மற்றும் சோயா பீன்ஸ் உற்பத்தி கடுமையாக சரிந்து விட்டது. இதனால் உணவு தானியங்கள் இறக்குமதியை நம்பி இருக்கும் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற ஏழை நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுவதுடன், அவர்களுடைய உடல்நலமுகம் கேள்விக் குறியாக உள்ளது. கடந்த ஜூன், ஜூலையில் சோளம், கோதுமை ஆகியவற்றின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. சோயா பீன்ஸ் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு ஜிம் யாங் கிம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment