Saturday, September 1, 2012

புலிகள் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் சீனா 7 இராணுவ முகாம்களை மேம்படுத்த 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது!

Saturday, September 01, 2012
இலங்கை::புலிகள் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் சீன அரசாங்கம் முதல் முறையாக வடக்கில் உள்ள 7 இராணுவ முகாம்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான ஆனையிறவு, பூநகரி, காரைநகர், மன்னார்,பலாலி, கல்லடி, முல்லைத்தீவு ஆகிய முகாம்கள் இந்த நிதியுதவியின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளன. இலங்கையின் இராணுவ முகாம்களை முன்னேற்றுவதற்காக சீனா, நிதியுதவியை வழங்கியது இதுவே முதல் முறையாகும்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங் லி தலைமையிலான 23 இராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment