Saturday, September 1, 2012

தானே புயலால் வீடு இழந்தவர்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடு கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு : ஜெயலலிதா உத்தரவு!

Saturday, September 01, 2012
சென்னை::தானே புயலால் வீடு இழந்தவர்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு இறுதியில், தமிழகத்தை தாக்கிய ‘தானே’ புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கட்டிடங்கள், பயிர்கள், வீடுகள் மற்றும் படகுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ‘தானே’ புயலால் வீடு இழந்த மக்களின் துயர் துடைக்க, அவர்களுக்கு ரூ.1,000 கோடி செலவில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் வீடுகளும் விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகளும் கட்டித்தர ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு வீடும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 200 சதுர அடி அளவில் கட்டித் தரப்படும். வீடுகள் ஒரு அறை, சமையலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக இருக்கும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment