Saturday, September 1, 2012

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்–சவேந்திர சில்வா!

Saturday, September 01, 2012
இலங்கை::யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிடமிருந்து புலிகள் மிகவும் எளிதில் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய மற்றும் இலகு ரக ஆயுத பாவனை தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம், சர்வதேசத்தில் ஆயுதங்கள் எவ்வாறு மலிந்து கிடக்கின்றன என்பது தெளிவாக புலனாகியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு ரீதியில் சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை ஒடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment