Saturday, September 01, 2012இலங்கை::கூட்டாக இணைந்து செயற்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் இவ்வாறு இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும்,இந்தப் பிரச்சாரம் பொய்யானது எனவும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் எவ்வித இரகசிய புரிந்துணர்வு உடன்படிக்கையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் மாதம் 8ம் திகதிய தேர்தலின் பின்னர் கூட்டிணைந்த செயற்படுவதா அல்லது இல்லையா என்பது பற்றியே தீர்மானிக்கப்படும் என இரண்டு கட்சிகளும் குறிப்பிட்டுள்ளன.
No comments:
Post a Comment