Monday, September 24, 2012
புதுடெல்லி::சவுதி அரேபியாவின் அரசர் அப்துல்லா பின்-அப்துல்லாசிஸின் மகளான இளவரசி அடெலா பின்ட் அப்துல்லா அல் சவுத் 6 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
12 உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன் இந்தியா வந்த இளவரசி அடெலா இன்று தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பினார். சவுதி அரேபிய பாரம்பரிய பாதுகாப்பு சங்கம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினரான அடெலா இன்று மாலை தனது பயணத்தை நிறைவு செய்தார்.
இந்தியா வந்த அடெலா பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சோனியா காந்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், சுற்றுலாத்துறை அமைச்சர் சுல்தான் அகமது உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு உறவு பற்றிய பல்வேறு விஷயங்களை விவாதித்தார். இறுதியாக தாஜ்மகால் சென்று அதன் அழகை ரசித்துவிட்டு அடெலா, ரியாத் புறப்பட்டு சென்றார்.

No comments:
Post a Comment