Monday, September 24, 2012
இலங்கை:ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத்பொன்சேகாவுக்கு, ஐக்கிய தேசிய கட்சி நிபந்தனையொன்றை விதித்துள்ளது.
பிரதான எதிர்கட்சி தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியில் சரத்பொன்சேகாவின் கட்சி இணைந்து கொள்ளுமானால் இந்த நிபந்தனைக்கு இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் உறுப்பினர்களை ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொள்ளக் கூடாது என்று அந்த நிபந்தனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி சரத்பொன்சேகாவின் கட்சியில் இணைந்து, ஒன்றிணைந்த எதிர்கட்சியில் செயற்படுவதற்கும், அதில் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் முயல்வதாக வெளியான தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறி;;த்த நிபந்தனை தொடர்பாக எதிர்கட்சித் தலைவரினால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் ஊடாக சரத் பொன்சேகா தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு சரத்பொன்சேகா தலைமையிலான கட்சியினரை இணைத்துக் கொள்வது தொடர்பாக தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன..

No comments:
Post a Comment