Monday, September 24, 2012
இலங்கை:தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் விரைவில் எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1987ம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் அடிப்படையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களினாலேயே தமழி; மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மிக நெருக்கடியான யுத்த காலப்பகுதியில் வடக்கு மக்களை ஒடுக்காது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி உறுப்பினர்கள் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment