Monday, September 24, 2012
மீனம்பாக்கம்::சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 6 மணிக்கு 48 பயணிகளுடன் புறப்பட்டது. ஓடு பாதையில் விமானம் ஓட தொடங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து, ‘புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை கொண்டு வந்து நிறுத்துங்கள்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து புறப்பட்ட இடத்திலேயே விமானம் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. கதவுகள் திறக்கப்பட்டதும் விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர், காலை 9 மணியளவில் விமானம் சரி பார்க்கப்பட்டு 9.15 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு சென் றது. இயந்திர கோளாறு உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் 48 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

No comments:
Post a Comment