Monday, September 24, 2012

இலங்கையை வந்தடைந்தார் மார்க் ட்ரொவெல்!

Monday, September 24, 2012
இலங்கை::சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான விசேட கண்காணிப்பாளரும் அவுஸ்திரேலிய சட்டத்தரணியுமான மார்க் ட்ரொவெல் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார.


மன்னார் நீதவானுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்து ரிஷாட் பதியூனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை கண்காணிப்பதற்காகவே அவர் வருகைத்தந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சர்வதேச பாராளுமன்ற சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே சட்டத்தரணி மார்க் ட்ரொவெல்  இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment