Monday, September 24, 2012

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பி;ன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து மாலினி பொன்சேகா விலகினார்!:மாலினியின் ராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!

Monday, September 24, 2012
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மாலினி பொன்சேகா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையான மாலினி பொன்சேகா 2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

அதேவேளை, அவரது விலகல் தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது செயலாளர் குறிப்பிட்டார்..

மாலினியின் ராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!

பிரபல சினிமா நட்சத்திரமான மாலினி பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர கூறியுள்ளார்.

No comments:

Post a Comment