Wednesday, September 26, 2012
பூந்தமல்லி::பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் புலிகளின் ஆதரவாளர் செந்தூரனை, தற்கொலை முயற்சி வழக்கில் இரண்டாவது முறையாக போலீசார் நேற்று கைது செய்தனர்.
தன் மீதுள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செந்தூரன் கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டம் துவக்கினார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, செந்தூரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனை கடந்த மாதம் 31ம் தேதி போலீசார், தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த மாதம் 18ம் தேதி செந்தூரன் ஜாமீனில் வெளி வந்தார். போலீசார், பூந்தமல்லி சிறப்பு முகாமில் அவரை அடைத்தனர். அன்று முதல் உண்ணாவிரதத்தை மீண்டும் செந்தூரன் துவக்கினார். எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் செந்தூரனை, பூந்தமல்லி போலீசார் நேற்று இரண்டாவது முறையாக தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி செந்தூரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment