Wednesday, September 26, 2012
இலங்கை::இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுதிரும்பும் தமிழர்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள தமிழ் பேசும் மக்களை துரிதமாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளனர்.
கடந்த வாரத்திலும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை தமிழ் பேசும் மக்கள் நாடுதிரும்பியிருந்தனர்.
நேற்றைய தினமும், 22 பேர் இலங்கை வந்தனர்.
அவர்களை ஏற்கனவே தங்கியிருந்த இடங்களில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறு நாடுதிரும்பியவர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் எந்தவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment