Monday, September 3, 2012

2014 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சே மேற்கொள்ளும்!

Monday, September 03, 2012
இலங்கை::2014 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சே மேற்கொள்ளவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வெளியேறவுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் போர் முடிந்த பின்னர் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச நிறுவனங்கள் வடக்கில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.

இவற்றில் பெரும்பாலான நிறு வனங்கள் கடந்த ஆண்டின் இறுதி யிலிருந்து கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. இருப்பினும் யாழ். மாவட்டத்தில் ஒரு சில நிறுவனங்கள் தொடர்ந்தும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக் கைகளில் ஈடுபட்டன. யாழ்ப்பாணத்தில் முழுமையாகக் கண்ணிவெடி அகற்றி முடிப்பதற்கு இன்னமும் 10 ஆண்டுகள் வரையில் தேவை என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இலங்கையி லுள்ள தூதரகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா. முகவர் அமைப் புக்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நிதி வழங்கும் நிறுவனங்கள் என்பன கலந்து கொண்டன.

இதில் 2014 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக் கைகளைத் தாம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் ஊடாக இதனை மேற்கொள்ளவுள்ளது. இதன் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment