Monday, September 3, 2012

கூரிய ஆயுதத்தால் தாக்கி 17 வயது யுவதி கொலை; சந்தேகநபர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி!

Monday, September 03, 2012
இலங்கை::கெக்கிராவ, திப்பட்டுவெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 17 வயது யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் இளைஞன் இன்று பகல் இந்த கெலையை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரி்வித்துள்ளார்.
சந்தேகநபரான சேவையை விட்டுச் சென்ற இராணுவ சிப்பாய், யுவதியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதன்போது தாக்குதலை சமரசப்படுத்த முயற்சித்த சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்ந்து நஞ்சருந்திய சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட யுவதி ஒப்பலோகம காகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment