Monday, September 03, 2012சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு கருணாநிதி இன்று அளித்த பேட்டி:
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?
அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. ராஜபக்சே வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
எதிர்ப்பை காட்ட போராட்டம் நடத்துவீர்களா?
போராட்டம் நடத்தும் முடிவு இல்லை.
இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாரே?
இலங்கை தமிழர் பற்றி பேச இவருக்கு (ஜெயலலிதா) என்ன அக்கறை இருக்கிறது?
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment