Monday, August 27, 2012

துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் பலி; விசாரணைகள் ஆரம்பம்!

Monday, August 27, 2012
இலங்கை::ஹொரண, மொரகஹஹென பகுதியில் தந்தையும், மகளும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த தாய் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயும், தந்தையும், மகளும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் இருந்தவர் துப்பாக்கிப் பிரயோகதத்தை மேறகொண்டுள்ளார்.

உயிரிழந்த தந்தை மற்றும் அவரது நான்கு வயது மகள் ஆகியோரது சடலங்கள் ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment