Monday, August 27, 2012இலங்கை::தேர்தல் முடிவுக்கள் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் மூன்று மாகாணசபைகளில் நடைபெறவுள்ள தேர்தல்கள் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிகோலும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுறுத்திய காரணத்தினால் சர்வதேச சமூகம் இலங்கை மீது விமர்சனக் கணைகளை தொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு விமர்சனக்காரர்கள் தமக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் பதிலளிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment