Monday, August 27, 2012

நிர்வாண காட்சி சர்ச்சையால் பேஸ் புக்கை மூடினார் ஹாரி!

Monday, August 27, 2012
லண்டன்::நட்சத்திர ஓட்டலில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த காட்சிகள் வெளியானதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து, தனது பேஸ் புக் கணக்கை மூடிவிட்டார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி. இங்கிலாந்து இளவரசர் ஹாரி (27), விடுமுறையை ஜாலியாக கழிக்க சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். லாஸ் வேகாஸ் நகரில் நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது நீச்சல் குளத்தில் இளம்பெண்களுடன் அவர் ஜாலியாக இருந்தார். மேலும் ஓட்டல் அறையில் நிர்வாணமாக இளம்பெண்ணுடன் இருப்பது போன்ற படங்கள் பத்திரிகைகள், இணைய தளத்தில் வெளியாகின.

இதனால் ராணி குடும்பத்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. படங்களை வெளியிட கூடாது என்று ராணி குடும்பத்தினர் எச்சரித்தனர். எனினும், தொடர்ந்து படங்கள் வெளியாகி இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த படங்கள் மேலும் வெளியாகலாம் என்று ஹாரிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனது பேஸ் புக் கணக்கை மூடிவிட்டார். அந்தரங்க செயலாளர் ஜெமி லோதர் பிங்கர்டன் அறிவுரையை ஏற்று பேஸ் புக் பக்கத்தை மூடியுள்ளார் ஹாரி. பேஸ் புக்கில் ஹாரிக்கு 400க்கும் அதிகமான நண்பர்கள் தொடர்பு வைத்திருந்தனர். லாஸ் வேகாஸ் ஓட்டலில் ஹாரியுடன் இருந்த மிக நெருங்கிய நண்பர்கள் டாம் (25), ஆர்தூர் லேண்டன் (30) ஆகியோரும் தங்கள் பேஸ் புக் பக்கத்தை மூடியுள்ளனர்...

பணத்துக்கு கதையை விற்க தயார் ஹாரியுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்கள் பரபரப்பு பேட்டி!

லண்டன்: அமெரிக்க ஓட்டலில் இளம்பெண்ணுடன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் ஹாரியுடன் நடந்தது பற்றிய எல்லா விவரங்களையும் தெரிவிக்க தயார் என்றும் அதற்கு 1.4 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் 2 இளம்பெண்கள் பேரம் பேசி வருகின்றனர். இதனால் ஹாரிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், சார்லஸ் டயானாவின் இளைய மகனுமான ஹாரி, ராணுவ பயிற்சி பெற்று ஹெலிகாப்டர் பைலட்டாக இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையிலும் இவர் இடம்பெற்றுள்ளார். இவருக்கு வயது 27. இவர் சமீபத்தில் விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 2 இளம்பெண்களுடன் ஹாரி நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால் இங்கிலாந்து ராணி குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முக்கிய பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கள் வெளியிடும் டிஎம்இசட் அமெரிக்க வெப்சைட்டில், ஹாரியும் அவருக்கு பின்னால் இளம்பெண் ஒருவரும் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் கடந்த புதன்கிழமை வெளியாகின. அந்த போட்டோக்களை வெளியிட கூடாது என்று பத்திரிகைகளுக்கும் வெப்சைட்டுகளுக்கும் ராணி குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்தன. எனினும், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக ஹாரியை பற்றி செய்திகள் படங்கள் வெளிவந்தன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஹாரியுடன் நிர்வாணமாக இருந்த 2 இளம்பெண்கள், ஓட்டலில் நடந்தது பற்றி வெளியில் சொல்ல 1.4 கோடி பேரம் பேசி வருகின்றனர். ஏற்கனவே இளம்பெண்ணுடன் ஓட்டல் அறையில் ஹாரி நிர்வாணமாக இருக்கும் போட்டோவை பெறுவதற்காக அந்த பெண்ணுக்கு 55 லட்சம் ரூபாயை டிஎம்இசட் வெப்சைட் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க பப்ளிகேஷன் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், இளம்பெண்கள் கேட்கும் தொகை இப்போதைக்கு கொஞ்சம்தான். இந்த விஷயத்தை வைத்து அவர்கள் ஜாக்பாட் அடித்து செல்ல போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். ஹாரியின் அந்தரங்க விஷயங்களை வெளியிட பெண்கள் பேரம் பேசி வருவது ராணி குடும்பத்தினருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment