Saturday, August 25, 2012

ஜனாதிபதியை சந்தித்தார் அகாஷி!

Saturday, August 25, 2012
இலங்கை::இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் சமாதானம், அபிவிருத்தி மற்றும் நல்லிணகத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை யசூஷி அகாஷி இதன்போது பாராட்டியுள்ளார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுகின்ற மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானின் விசேட பிரதிநிதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு யசூஷி அகாஷி பாராட்டு தெரிவித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment