Saturday, August 25, 2012புதுடில்லி::இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை இதுவரை மறைத்து மத்திய அரசு அற்பத்தனமாக செயல்பட்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாயிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், இந்த விஷயம் கவலைக்குரியது. இது பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என கூறினார்.
No comments:
Post a Comment