Tuesday, August 28, 2012

இலங்கை மற்றும் இந்திய கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பு!

Tuesday, August 28, 2012
இலங்கை::இலங்கை மற்றும் இந்திய கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் நான்கு நாள் கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமை உட்பட கடல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுகின்றது.

இரு நாட்டுக் கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துதல், கடல் தொடர்பில் பரஸ்பர அக்கறை காணப்படும் விடங்களில் ஒத்துழைத்தல் ஆகியன இரு நாட்டு அரசாங்கங்களின் முயற்சியாக உள்ளன.

இலங்கை கரையோரப் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.ஏ. டயஸ் மற்றும் இந்தியாவின் வைஸ் அட்மிரல் எம்.பி.முரளிதரன் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.

No comments:

Post a Comment