Tuesday, August 28, 2012

தமிழ் மக்களை வேறு திசைக்கு திருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் - மின்சத்தி எரிசத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

Tuesday, August 28, 2012
இலங்கை::தமிழ் மக்களை வேறு திசைக்கு திருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் இடம்கொடுக்கக்கூடாது என்று மின்சத்தி எரிசத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் சம்பிக்க, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் மீன் விநியோகத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கம் செய்யும் வேலைத்திட்டங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமும் விமர்சித்து வருகின்றர். இவ்வாறு விமர்சிப்பதன் மூலம் தமிழ் மக்களை வேறு திசைக்கு திருப்புகின்ற நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் இடம்கொடுக்கக்கூடாது.

நாடு முழுவதும் ஒளிபெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசாங்கத்தினால் மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த மின்சாரத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி முன்னேற்றம் அடைய வேண்டும். கிளிநொச்சியில் இருந்து எந்தவிதமான தடங்களும் இன்றி மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் (27.08.2012) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நகரத்தில் உள்ள வியாபாரிகள் உங்களைத் தேடி பல இலத்திரனியல் பொருட்களை கொண்டு வருவார்கள். இதனை நீங்கள் பெற்றுக்கொள்வதன் மூலம் மின்சாரத்திற்கு அதிக கட்டணத்தைச் செலுத்த நேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு வீண் மின் பாவனையைத் தவிர்த்து பிள்ளைகளின் கல்விக்காக அதனை பயன்படுத்தி எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு முறைகளில் சிறந்து விளங்க பெற்றோர்கள் பங்களிப்பு வழங்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment