Tuesday, August 28, 2012

நன்றி மறவா மக்கள் நாட்டை இனவாதிகளுக்கு தாரைவார்க்க மாட்டார்கள் - ஜனாதிபதி!

Tuesday, August 28, 2012
இலங்கை::மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பயணத்தை பின்நோக்கி இட்டுச்செல்ல எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றியீட்டும் கீழ்த்தரமான முயற்சியில் ஒரு சில அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புல்மோட்டையில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் நாடு பின்னடைவை சந்திக்குமே தவிர ஒருபோதும் முன்நோக்கிச் செல்லாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையின் நன்றி மறவா மக்கள் இனி ஒருபோதும் நாட்டை இனவாதிகளுக்கு தாரைவார்க்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய காணிகளின் உரிமை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாட்டிற்குள் வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, காணிகளின் உரிமையை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment