Tuesday, August 28, 2012

வெள்ளவத்தையில் மீன்கள் கரையொதுங்கின; மூழ்கிய கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமா?.

Tuesday, August 28, 2012
இலங்கை::வெள்ளவத்தையை அண்மித்த கடற்பரப்பில் திடீரென மீன்கள் இறந்தமை தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

பாணந்துரை கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக மீன்கள் இறந்தனவா என்பது தொடர்பாக இதன்போது ஆராயப்படுவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் டொக்டர் எஸ்.ஜி.சமரசுந்தர தெரிவித்துள்ளார்.

இறந்த மீன்களின் பாகங்கள் தமது நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment