Sunday, August 26, 2012இலங்கை::புலிகள் இருந்த காலத்தில் நடாத்திய சவப்பெட்டி அரசியலை இப்போது (புலி)கூட்டமைப்பினர் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் தங்களால் கொல்லபட்ட,அரசியல்வாதிகள், அல்லது புலிகளின் தளிபதிகளுக்கு அல்லது பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆதரவு தேடிக்கொள்வார்கள்.குமார் பொன்னம்பலத்தை கொழும்பில் வைத்து கொன்றுவிட்டு அவர் குடும்பத்தினரைக் கௌரவித்தார்கள்.புலிகளின் கிளேமோர்க் கண்ணிவெடியில் கொல்லப்பட்ட பாதிரியார்கள் கருணரத்னம், பாக்கியரஞ்சித், மற்றும் கூட்டமைப்பு எம்.பியான சிவனேஸ்வரனுக்கு விழுந்து கட்டிக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். தாங்களே கொன்றுவிட்டு மாமனிதர் பட்டம் கொடுத்துக் கௌரவித்தார்கள். இதன் மூலம் ஆதரவையும் தேடிக்கொண்டார்கள்.பரிஸ் நகரில் வைத்து கஜன்,நாதன் என்ற தங்கள் உறுப்பின்ர் இருவரை படுகொலை செய்துவிட்டு அவர்களுக்கு லெப்டினண்ட் கேணல் பட்டமும் கொடுத்தார்கள்.அவர்களைக் கொன்றது இலங்கைப் புலனாய்வுத்துறை என்று குற்றம் சாட்டினார்கள்.மகேஸ்வரன் எம்.பிக்கும் மாமனிதர் பட்டம் கொடுத்திருப்பார்கள்,புலிகளின் துரதிஸ்டம் மகேஸ்வரனைக் கொன்ற புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டுவிட்டார். புலிகள் அழிந்ததால் மாமனிதர் பட்டம் பெறத்தவறியவர்கள் சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் செல்வம் அடைக்கலநாதன். இவர்கள் எப்போதோ புலிகளின் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள். அதற்கான தருணம் புலிகளுக்குக் கிட்டவில்லை. ஆனால் முன்னாள் யாழ் மேயர் ரவிராஜ், எம்.பி சிவனேஸ்வரன் ஆகியோரால் புலிகளிடமிருந்து தப்பித்துகொள்ள முடியவில்லை. ஆனால் புலிகள் செய்தது போன்ற நடவடிக்கைகளை கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் செய்துகொண்டிருக்கிறார்.;
எங்காவது தமிழர்கள் கொல்லப்பட்டால் இராணுவத்தினர் மீது பழிபோடுவது வழக்கமான விடயம். வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவலிங்கம் கொல்லப்பட்டபோது ஸ்ரீதரன் அங்கு பிரசன்னமாகியிருந்தார். அந்தக் குடும்பத்திஅனருக்கு அனுதாபம் தெரிவிப்பவர் போல நடித்து அங்கு உரை நிகழ்த்திவிட்டுச் சென்றார். சிவலிங்கம் கொலைக்கும் சிறீதரனுக்கும் சம்பந்தமிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. கனடாவிலிருந்து சென்ற ஒருவர் கிளிநொச்சியில் கொல்லப்பட்டார். அவரை கோத்தபாயாவின் உத்தரவின்பேரில் இராணுவத்தினர்தான் கொன்றார்கள் என்று செய்திகள் பரவலாகப் பேசப்பட்டது. அங்கும் ஸ்ரீதரன் பிரசன்னமாகி உரை நிகழ்த்தினார். சில நாட்களின் பின் ஒரு பெண் உட்பட கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப்பட்டார்கள்.
அந்தக் கொலையை இராணுவத்தினர்தான் செய்தார்கள் என்று தமிழ்நெற் ஜெயா கொடுத்த தகவலை ரொறொன்ரோ சண் பத்திரிகையும் செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர் கொலையாளிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் புலிகள் என்று தெரிந்தவுடன் யாரும் மூச்சே விடவில்லை.
அண்மையில் வவுனியாச் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தில் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்தவர்களான நிமலரூபன், மற்றும் டில்ன்றொக்சன் ஆகியோரின் மரணம் கூட்டமைப்புக்கு இன்னும் வாய்ப்பாகிபோய்விட்டது. இப்படியான மரணச்சடங்கில் கலந்துகொள்ள ஸ்ரீதரன், மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரசன்னமாகத் தவறுவதில்லை. அரசாங்கத்தின்மேல் பழி போடும் இப்படியான மரணச்சடங்குகளில் இன்னொருவரும் கலந்துகொள்வார். அவர் வேறு யாருமல்ல மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்தான்.அரசாங்கத்திற்கெதிராக பிரச்சாரம் எங்கெல்லம் செய்ய முடியுமோ அவர் அங்கு காட்சியளிப்பார். ஆனால் தனது மலையக மக்களுக்கு இவர் எந்த நன்மையும் செய்த்தாக வரலாறு இல்லை.
வவுனியாச் சிறைச் சாலையில் நடந்த கலவரத்தில் தாக்குதலுக்குள்ளாகி இறந்த நிமலரூபனும், டிலக்சனும் அப்பவிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். ஏதோ தேசபிதாக்களி அரசாங்கம் கொன்றுவிட்டதுபோலப் பிரச்சாரமும் நடக்கிறது. அவர்கள் அப்பாவிகள். அரசாங்கத்தினால் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் பிரச்சாரம்.
இந்தக் கொலைக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் ஒருவித தொடர்பும் இல்லை. இறந்தவர்கள் அரசியல் கைதிகள். நூற்றுக்கணக்கானோர் அரசியல் கைதிகளாக உள்ளனர். புலிகள் இயக்கத்தில் இருந்த பல இளைஞர்கள் அமைதி வழிக்கு வந்துள்ளனர். ஆனால் இவர்களை அப்பாவிகல் என்று வர்ணிப்பவர்கள் வவுனியாச் சிறையில் உண்மையில் என்ன நடந்தது என்கிற மறுபக்கத்தை மறைக்கிறார்கள். சிறை அதிகாரிகளளக் கடத்தி அறைக்குள் பூட்டி வவுனியாச் சிறையில் இருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட 3 கைதிககளை மீண்டும் வவுனியா சிறைக்கு கொண்டு வரும்படி இந்த அப்பாவிகள் நிபந்தனை விதித்தார்கள். கட்டுப்படுத்தச் சென்றவர்கள் இவர்களால் தாக்கப்பட்டார்கள். விசேட படையினர் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுத்தமுயற்சியில் நிமலரூபனும்.டிலக்சனும் தாக்குதலுக்குள்ளானர்கள். இதனால் இவர்கள் கோமா நிலைக்குள்ளாகி இறக்கவேண்டி ஏற்பட்டது.
எந்த ஒரு நாட்டிலும் அரச படைகளுடனோ, அல்லது அதிகாரிகளுடனோ நேரடியாக தாக்குதலில் ஈடுபடுபவர் தப்பிக்கவே முடியாது. சிறை அதிகாரிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பல
ர் அமெரிக்காவிலும்,கனடாவிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்லது கோமா நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.சமீபத்தில் தமிழர் ஒருவர் ரொறொன்ரோவில் பொலிசாரின் தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்று மரணமடைந்தார். பொலிசசர் மீது தாக்குதல் நடாத்த முற்பட்ட பலர் பொலிசாரின் தாக்குதலில் கோமாநிலைக்கு ஆளாகி மரணமடைந்ததை பல தடவைகள் அறிந்திருக்கிறோம். ஆனால் பொலிசார்மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இரு ஆண்டுகளுக்கு முன்பு மொன்றியாலில் நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிடவேண்டும். ஒரு ஜமேக்கா நாட்டைச் சேர்ந்தவரும் ஹயானா நாட்டைச் சேர்ந்த இந்தியரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது காரை நிறுத்த வேண்டிய சைகை விளக்கில் நிறுத்தாமல் சென்றதால் பொலிசார் காரை நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளனர். ஆனால் சாரதி காரை நிறுத்தாமல் பொலிசாருடன் போட்டி போட்டுக்கொண்டு வாகனத்தைச் செலுத்தினார். அந்த வாகனத்தை பொலிசார் மோதிக் கவிழ்த்ததில் அந்த இருவரும் இறந்துவிட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பொதுமக்களையும் பொலிசார் விரட்டியுள்ளனர்.பொலிசார்மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னொரு இடத்தில் பூங்கா ஒன்றிற்குள் இருந்து உரையாடிக் கொண்டிருந்த ஹொண்டூராஸ் நாட்டு இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளைஞர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளையில் அந்த இளைஞர்கள் ஒத்துழைக்காமையால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞன் கொல்லப்பட்டான். இதனால் அந்தச் சமூகத்திற்கும் பொலிசாருக்கும் பெரிய கலகமே ஏற்பட்டு கடைகள் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொலிசார்மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பொலிசாருக்கு ஒத்துழைக்காதவர்கள் பலர் இந்நாடுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் என்றுகூடப் பார்ப்பதில்லை.
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளோடு வாதாடினால், அல்லது அவர்களுக்கு இடையூறாறக ஏதாவது செய்தாலும் விளைவு பாரதூரமாக இருக்கும்.
இப்படியாக இருக்கும்போது இலங்கையில் சிறைச்சாலை அதிகாரிகளைக் கடத்திச் சிறையிலடைத்து நிபந்தனைகளை விதித்தால் ஏனையவர்கள் இவர்களுக்கு பாலும் சோறுமா கொடுப்பபர்கள். டில்றொக்சனும் நிமலரூபனும் அப்பாவிகள் மாதிரியா நடந்து கொண்டார்கள்? முன்னாள் புலிகள் தங்கள் புலிக்குணத்தையே காட்டினார்கள்.
சரி இப்படியான சம்பவங்களைக் கண்டிக்க அருகதையுள்ளவர்கள் யார்;?
.புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களைக் கண்டித்தவர்கள் யார்?
கந்தன் கருணைப் படுகொலையைக் கண்டித்தவர்கள் யார்?
வன்னியில் புலிகளின் சிறையில் இருந்தவர்கள் எல்லோரும் எங்கே?
கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த எட்வேட் என்ற இளைஞர் புலி உறுப்பினர் மலரவனைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு எலும்புகள் நொருக்கப்பட்டு ச்த்திரவதை செய்து கொல்லப்பட்டபோது யார் புலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்?
முள்ளிவாய்க்காலில் காயப்பட்டவர்கள் மினிபஸ் ஒன்றிற்குள் அடைத்துவைத்து புலிகளால் குண்டுவைத்துக் கொல்லப்பட்டது ஸ்ரீதரனுக்குத்தெரியாமல் போனதா?
ஆனால் கூட்டமைப்பு இப்படியான மரணங்களில் தங்கள் மூக்கை நுளைத்து அனுதாபிகள் போல் நடித்து தங்களுக்கு ஆதரவையே தேடிக்கொள்கிறது.
No comments:
Post a Comment