Monday, August 27, 2012இலங்கை::பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத குற்றச் செயல்கள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தி, அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மல்வத்து பீடாதிபதியை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்த போது அவர் தெரிவித்துள்ளார்.
சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தேவையின்றி நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றயப்பட்டுள்ளனரா என மல்வத்து பீடாதிபதி, அமைச்சர் பீரிஸிடம் வினவியுள்ளார்.
சிலர் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டத்தை வழங்க அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment