Monday, August 27, 2012

இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும் - இந்தியா!

Monday, August 27, 2012
புதுடெல்லி::இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு n;தாடர்ச்சியாக பயிற்சிஅளிக்கப்படும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு பயிற்சி நிலையங்களில் தொடர்ச்சியாக இலங்கைப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் எம்.எம்.பால்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது எனதமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர்ராஜூ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நட்பு நாடு எனவும், n;தாடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகள் குறித்துகவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment