Tuesday, August 28, 2012இலங்கை::புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு என்ற அமைப்பு வடக்கு, கிழக்கு செயற்பாடுகளில் தலையீடு செய்து வருவதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றும் ஜெகன் தம்பையா கலிபோர்னியாவில் ரி.ஓ.என்.ஓ. அமைப்பின் முன்னாள் தலைவராவார். மேற்படி அமைப்பு, விடுதலைப்புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு 4 லட்சம் டொலர்களை வழங்கியிருந்தது.
வன்னி பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு, புலிகளின் மூத்த தலைவரான திலிபனின் பெயரில் மருத்துவ நிலையம் ஒன்றை அமைத்திருந்ததாகவும் திவயின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment