Tuesday, August 28, 2012

நின்ற ஆம்னி பஸ் மீது மற்றொரு பஸ் மோதல் : அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் பலி!

Tuesday, August 28, 2012
பாடாலூர்::பெரம்பலூர் அருகே இன்று அதிகாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதிய விபத்தில் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர், அவ ரது மகன் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு 12.40 மணிக்கு ஆம்னி பஸ் ஒன்று திருச்சிக்கு புறப்பட்டது. பஸ்சில் மொத்தம் 41 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பெரம்பலூரை அடுத்த நார ணமங்கலத்திற்கும், ஆலத்தூர் கேட்டுக்கும் இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் வந்தபோது பஞ்சரானது. இதையடுத்து டிரைவரும், கிளீனரும் பஸ்சை ரோட்டோரம் நிறுத்திவி ட்டு டயரை கழற்றிக் கொண்டிருந்தனர். இதனால் இந்த பஸ்சில் இருந்த சில பயணிகள், கீழே இறங்கி, பஸ்சின் முன்பக்கம் இருந்த பாலத்தின் கட்டையில் உட்கார்ந்திருந்தனர். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த மற்றொரு ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதனால் நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் முன்நோக்கி வேகமாக நகர்ந்ததில், பாலக்கட்டையில் உட்கார்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் அங்கு உட்கார்ந்திருந்த, திருச்சி மாநக ராட்சி 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதா(52), பி.இ பட்டதாரியான அவரது மகன் ஆனந்த் (23), மற்றும் ஒரு பெண், ஒரு ஆண்(அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை) என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதில் பாலத்தின் கட்டையுடன் பஸ் சேர்த்து நசுக்கியதில் கவுன்சிலர் அமுதாவின் உடல் இரண்டு துண்டுகளானது. மேலும் மோதிய பஸ்சை ஓட்டி வந்த திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சத்தியமூர்த்தி (31) மற்றும் 2 பஸ்களி லும் இருந்த 16 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன், ஆர்டிஓ ரேவதி, பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று காயமடைந்தவர் களை மீட்டு, 108 ஆம்புலன்சில் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், வழியிலேயே பழநியை சேர்ந்த வாசுகி (38) என்பவர் இறந்தார். மற்ற 16 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment