Tuesday, August 28, 2012

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் காங்கேசன்துறை தொடருந்து பாதையை நவீனமயப்படுத்தும் பணிகள் நிறைவுபெறும்-கோத்தபாய ராஜபக்ஷ!

Tuesday, August 28, 2012
இலங்கை::2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் காங்கேசன்துறை தொடருந்து பாதையை நவீனமயப்படுத்தும் பணிகள் நிறைவுபெறும் எனவும் மதவாச்சியில் இருந்து மடு வரையான தொடருந்து பாதையின் நிர்மாணிப்பு பணிகள் அடுத்த மார்ச் மாதம் நிறைவு பெறும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மடு முதல் தலைமன்னார் வரையான தொடருந்து பாதையின் நிர்மாணிப்பு பணிகள் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் காரணமாக வடபகுதிக்கான தொடருந்து பாதைகள் வவுனியா வரை மாத்திரமே மீதமாகியதாகவும், ஏனைய பாதைகள் புலிகளால் அழிக்கப்பட்டதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.

அதேவேளை வடக்கில் இருந்த படையணிகளில் 8 படையணிகள் கிழக்கு மற்றும் தென் பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் மாத்திரம் 100 நாடுகளை சேர்ந்த 31 ஆயிரத்து 500 பேர் வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளனர் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

No comments:

Post a Comment