Monday, August 27, 2012

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 220 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது!

Monday, August 27, 2012
இலங்கை::தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 220 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்திலேயே அதிகளவு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அனுராதபுர மாவட்டத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 54 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்திலும் அதிகளவு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தேர்தல் தினம் அண்மித்துள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக பெபரல் மற்றும் கபே ஆகிய தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments:

Post a Comment