Monday, August 27, 2012

முன்னாள் அமைச்சர் அமரர் ரீ.மகேஸ்வரன் கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு மரண தண்டனை!

Monday, August 27, 2012
இலங்கை::முன்னாள் அமைச்சர் அமரர் ரீ.மகேஸ்வரன் கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான (LTTE) சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்து சமய விவகார அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் அமரர் மகேஸ்வரன் கடமையாற்றியிருந்தார். கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி கொச்சிக்கடை இந்து ஆலயமொன்றில் மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

அமரர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் மகேஸ்வரனின் கொலையாளியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment