Wednesday,July 04, 2012
இலங்கை::இந்திராகாந்தி அம்மையார் அன்று ஆயுதங்களை வழங்கிப் புலிகளை வளர்த்துவிட்டதுபோல் இன்று அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து புலிகளைப் பலப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்று பலமாக உள்ளது. உள்நாட்டிலும் புலிகளின் பலம் முழுதாகக் குன்றவில்லை. வவுனியா சிறைச்சாலை சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேனனின் உபதேசமோ அல்லது ஜெயலலிதா அம்மையாரின் உபதேசமோ தமக்குத் தேவையில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர இன்று தெரிவித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் ஒரு கதையையும், இந்தியாவில் மற்றுமொரு கதையையும் கூறுகின்றார். மேனனின் எந்தவொரு உபதேசமும் எமக்குத் தேவையில்லை. எமது நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு எங்களுக்குத் தெரியும்.
வட மாகாணசபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு இந்தியா ஏன் அவசரப்படுகின்றது? அமெரிக்கா ஏன் இந்த விடயத்தில் அதிக நாட்டம் காட்டுகின்றது? வடக்கில் பூரண அமைதி ஏற்பட்ட பின்னரே அங்கு தேர்தலை வைக்கவேண்டும். வடக்கில் இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. புலிகளின் அச்சுறுத்தல் உள்ளது." என அவர் கூறினார்.

No comments:
Post a Comment