Thursday, July 5, 2012

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மியான்மர் ராணுவ வீரர்கள் கைது!

Thursday, July 05, 2012
அய்ஸ்வால்::இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, மியான்மர் நாட்டு ராணுவ வீரர்கள் இருவரை, அசாம் ரைபிள் படையினர் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து, ஏ.கே.47 ரக துப்பாக்கி, மாத இதழ் மற்றும் மொபைல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்தியாவில் மிசோராம் மாநிலத்தில், இந்தியா - மியான்மர் (பழைய பர்மா நாடு) நாட்டுக்கும் இடையே உள்ள சர்வதேச எல்லையில், 404 கி.மீ., தூரத்திற்கு, இந்திய அசாம் ரைபிள் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள சில்கிரிபாய் அருகே எல்லை கடந்து மிசோராம், சாம்பாய் மாவட்டம் நுகுர் கிராமத்தின் வழியே, மியான்மர் நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த, இரு வீரர்கள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த விவசாயியை மிரட்டி, முறைகேடாக ஒரு லட்சம் கியாத் (மியான்மர் நாட்டு கரன்சி) கேட்டனர். அப்போது அங்கு வந்த அசாம் ரைபிள் படை வீரர்கள் அவர்களை பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மியான்மர் ராணுவ வீரர்கள் என்பதும், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரிந்தது. பின்னர் அவர்கள் மிசோராம் சாம்பாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, மொபைல்போன் மற்றும் மாத இதழ் ஆகியவை கைப்பற்றப்பட்டன
.

No comments:

Post a Comment