Thursday, July 5, 2012

பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி படையினருடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள புதிய செயற்பாடுகள் குறித்து கருத்து!

Thursday, July 05, 2012
இலங்கை::திட்டமிட்ட குற்றங்கள் , ஒப்பந்த கொலைகள்,போதைவஸ்து பாவிக்கும் குழுக்கள், வெகுஜன கொலைகள், வங்கி கொள்ளை, திருட்டு மற்றும் பாதாள உலக குழுக்களின் நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸ் பிரிவினருக்காக தாம் விசேட உதவிகளை வழங்கவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி டீ ஐ ஜீ சந்திரசிறி ரனவன தெரிவித்தார்

நாடு முழுவதும் 61 பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்கள் உள்ளதாகவும் எந்த நேரத்திலும் குற்ற அழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய வகையில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட 8,000 கமாண்டோக்கள் இருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.ஜி.பீ என்.கே. இலங்க்கோன் நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொலிஸ் பிரிவினருக்கு உதவக்கூடிய அனுமதியை தந்துள்ளதாகவும் ஒரு ஊடக மாநாட்டில் கடந்த திங்களன்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் தற்போது அதிகமான குற்றச் செயல்கள் இடம் பெற்று வருவதாகவும் இவற்றுல் சிலவற்றைக் கையாள்வதில் பொலிஸ் பிரிவிகரும் குற்ற விசாரனைப் பிரிவினரும் சிரமங்களை மேற் கொள்வதாவும் இந்த சந்தர்ப்பங்களில் பொலீஸ் பிரிவினருக்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி இவ்வாறான குற்றச் செயல்களை இல்லாதொழிக்க தாம் திர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment