Thursday, July 5, 2012

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கு 1.35 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெருமதியான பாடசாலை உபகரணங்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அன்பளிப்பு!

Thursday, July 05, 2012
இலங்கை::யாழ் மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கு 1.35 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெருமதியான பாடசாலை உபகரணங்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கான 300 கதிரைகள் 300 பாடசாலை மேஜைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான 25 கதிரைகளுடன் 25 மேஜைகள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி அங்கு உரையாற்றும் போது எமது நாட்டில் இலங்கைத் தமிழர்கள் இலங்கை முஸ்லிம்கள் இலங்கை சிங்களவர்கள் என்று ஒரு இனமில்லையென்றும் இருப்பவர்கள் இலங்கையர்கள் மட்டுமென்றும் குறிப்பிட்டார். அத்துடன் இந்தத் தகவலை இளம் சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

தேசமான்ய கென் பாலேந்திரா அவர்களின் நிதி உதவியுடன் கௌரவ பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ வீரர்களால் 24 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டிடமொன்று தெல்லிப்பளை மகஜனக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டது.

இக்கட்டமானது படை வீரர்களது அர்ப்பணிப்பின் காரணமாக மதிப்பீட்டு நிதியை விட குறைந்த செலவில் நிர்மாணிப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டது. அதன் பின்னர் மீதமான நிதியில் பாடசாலைக்கு வேறு உதவிகள் செய்து தருமாறு யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்ற தேசமான்ய கென் பாலேந்திரா அவர்கள் இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment